நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் மற்றும் பலர் நடிப்பில் 'புஷ்பா-2; த ரூல்' படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. முக்கியமான கட்டப் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளதாகவும், அதில் 'பன்வர் சிங் ஷெகாவத்' கதாபாத்திரத்தில் நடிக்கும் பகத் பாசில் நிறைவு செய்துள்ளதாகவும், அவர் இந்த முறை அதிகப் பழிவாங்கும் உணர்ச்சியுடன் வந்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்கள்.
அமலாக்கத் துறை, வருமான வரி சோதனை என அப்படத் தயாரிப்பு நிறுவன அலுவலகத்தில் கடும் சோதனை நடைபெற்றது. அதனால், படப்பிடிப்பை சில நாட்கள் நிறுத்தி வைத்திருந்தார்கள். அவை நிறைவுற்ற பிறகு ஆரம்பமான படப்பிடிப்பு தற்போது தொடர்ந்து நடந்து வருகிறது. இரண்டாம் பாகம் பற்றி ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.