அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் | காதலில் விழுந்தாரா 'காந்தா' நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் |

பிறக்கும் வரை கருவறையில் சுமந்து, பிறந்த பின் இதய அறையில் சுமக்கும் அம்மா கண் கண்ட கடவுள். குழந்தையாக அன்பு மட்டும் கொடு போதும்; வேற எதுவும் வேண்டாம்' என எதையும் எதிர்பார்க்காத உறவுக்குள் அடங்காத உயிருக்குள் உறைந்த உறவான தன் அம்மா பிரேமா குறித்து அன்னையர் தினத்தில் மனம் திறக்கிறார் நடிகை சபிதா ராய்
அம்மா பிரேமா பற்றி சொல்லுங்களேன்
அம்மாவும் நடிகை நான்... 'முரட்டுக்காளை', 'ராணுவ வீரன்', 'மூவேந்தர்', 'ஜமீன் கோட்டை என பல படங்கள், மேடை நாடகங்களில் நடிச்சிருக்காங்க. கோவை சரளா போல் வர வேண்டும் என நடிக்க வந்தார். குடும்பச் சூழலால் நடிப்பை நிறுத்தினார். அவருக்கு பதில் என்னை நடிக்க வைத்து விட்டார்.
அன்னையர் தின கொண்டாட்டம் எப்படி
அம்மா தான் எல்லாம்.... அவங்களை கொண்டாடாமல் இருக்க முடியாது. அவங்க பிறந்த நாளைக்கு ஸ்பெஷல் ட்ரீட் கொடுப்பேன். செடி, கொடி, மரங்கள் என அம்மாவுக்கு இயற்கை பிடிக்கும். அதனால் கடந்தாண்டு அன்னையர் தினத்தில் அரிதான பிரம்மகத்தி பூ கொடுத்தேன். இந்தாண்டு ஐம்பொன் வளையல் பரிசாக கொடுக்கிறேன்
அம்மாவிடம் உங்களுக்கு பிடித்த விஷயம்
தைரியம் தான்... தனி பெண்ணாக என்னை, அக்காவை ஆளாக்கினாங்க. என் அக்கா மறைவுக்கு பின் துவண்டு போனார். என்னை நல்ல நிலைமைக்கு கொண்டு வரணும்னு தைரியமாக மீண்டு வந்தார். இந்த கால பெண்களுக்கு அந்த தைரியம் குறைவு தான்.
உங்களிடம் அம்மாவுக்கு பிடித்த விஷயம்
சினிமாவை இந்த அளவிற்கு நான் நேசிப்பேன்னு அம்மா நினைக்கலை. என் தேடல், முயற்சி ரொம்ப பிடிச்சிருக்கு. 'ஓடிகிட்டே இருக்கியே ஒய்வு எடுக்க மாட்டியா' என கேட்பாங்க நான் அவங்களை கொண்டாடுவது போல் அவங்க என்னை கொண்டாடுறாங்க
வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வுகள்
நடுத்தர குடும்பத்தில் பிறந்து, வளர்ந்து, உழைத்து சம்பாதித்து அம்மாவை இஸ்ரேல், எகிப்து புனித பயணம் அழைத்து சென்றது மறக்க முடியாத நிகழ்வு. 'பிரேமா இல்லம்' என அவர் பெயரில் சொந்த வீடு கட்ட வேண்டும் என்பது என் கனவு.
தற்போது நீங்கள் நடிக்கும் படங்கள்
'1947' படம் வெளியான பின், ஜெயம் ரவியுடன் 'சைரன்', நயன்தாராவுடன் ஒரு படம், இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிக்கும் 'ஜெ பேபி' படத்தில் நடிக்கிறேன். மனோபாலா கடைசியாக நடித்த பெயரிடாத படத்தில் நடிச்சிருக்கேன். அம்மாவை கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.