லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
2005ம் ஆண்டு பி. வாசு இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான படம் சந்திரமுகி. இப்படத்தில் ரஜினியுடன் ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். தற்போது 18 ஆண்டுகளுக்கு பிறகு சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார் பி. வாசு. கீரவாணி இசையமைக்கிறார். கடந்த சில மாதங்களாக தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் வருகிற 17-ம் தேதி முதல் மைசூரில் இறுதி கட்ட படப்பிடிப்பு 15 நாட்கள் நடைபெற்று மொத்த படப்பிடிப்பு நிறைவடைய உள்ளது. இந்த நிலையில் தற்போது சந்திரமுகி -2 படத்தை செப்டம்பர் 15ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிடுவதற்கு திட்டமிட்டு இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிந்ததும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரணாவத், லட்சுமி மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.