அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் | 10 மில்லியன் வியூஸ் - தமன்னா சாதனையை முறியடிப்பாரா பூஜா ஹெக்டே | விக்னேஷ் சிவனை பிரிவதாக வதந்தி : போட்டோவால் பதில் சொன்ன நயன்தாரா | தமிழில் மீண்டும் நடிக்கும் அன்னா பென் | சூர்யா சேதுபதியின் வாழ்க்கையில் விளையாடாதீர்கள் : அனல் அரசு வேண்டுகோள் | பிளாஷ்பேக் : நயன்தாராவை கவர்ச்சி களத்தில் தள்ளிய 'கள்வனின் காதலி' | 'பெத்தி' படத்தில் சிவராஜ் குமார் முதல் பார்வை வெளியீடு | ‛பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீ மேக்கான ‛தடக் 2' டிரைலர் வெளியீடு, ஆக., 1ல் ரிலீஸ் | சிவகார்த்திகேயன் 24வது படம் தள்ளிப்போகிறதா? |
பிரபு சாலமன் இயக்கிய கயல் படம் மூலம் பிரபலமானவர் நடிகை கயல் ஆனந்தி. அதைத்தொடர்ந்து பல படங்களில் பக்கத்து வீட்டுப்பெண் போன்ற கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். குறிப்பாக கமலி ப்ரம் நடுக்காவேரி என்கிற படத்தில் அவரது நடிப்பு இளம் மாணவியர்களுக்கு ஒரு உற்சாக தூண்டுதலாக அமைந்தது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கொரோனா தாக்கம் நிலவிய சூழ்நிலையில் திடீரென உதவி இயக்குனர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு அதிர்ச்சி அளித்தார் ஆனந்தி. அதைத் தொடர்ந்து மீண்டும் படங்களில் பிசியாக நடிக்க துவங்கியுள்ளார்.
கடந்த வருடம் இவரின் நடிப்பில் யூகி என்கிற படம் வெளியானது. இந்த நிலையில் தற்போது வரும் மே 12ஆம் தேதி கயல் ஆனந்தி நடித்துள்ள ராவணக்கோட்டம் மற்றும் கஸ்டடி என இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியாகின்றன. இதில் விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜுக்கு ஜோடியாக ராவணக்கோட்டம் என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் கயல் ஆனந்தி.
அதேசமயம் வெங்கட் பிரபு இயக்கத்தில் நாகசைதன்யா நடிப்பில் உருவாகியுள்ள கஸ்டடி திரைப்படத்திலும் கயல் ஆனந்தி ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இதுநாள் வரை வெளியே தெரியாமல் இருந்த இந்த விஷயம் சமீபத்தில் வெளியான இந்த படத்தின் ட்ரெய்லர் மூலமாக தெரிய வந்துள்ளது. படத்தின் கதாநாயகி கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார் என்பதால் கயல் ஆனந்தி முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் என்று சொல்லப்படுகிறது.