போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

திருமணம், குழந்தை பிறப்புக்கு பின்னர் மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார் ஸ்ரேயா. அதோடு திருமணத்திற்கு முன்பு நடித்ததை போலவே இப்போதும் கிளாமராக நடிப்பதற்கு தான் தயாராக இருப்பதாகவும் ஒரு தகவல் வெளியிட்டிருக்கிறார் ஸ்ரேயா.
இந்த நிலையில் தெலுங்கில் சிரஞ்சீவி நடித்து வரும் போலா சங்கர் என்ற படத்தில் அவரை ஒரு பாடலுக்கு நடனமாட படக்குழு அணுகியிருக்கிறது. ஆனால் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவதற்கே கதாநாயகியாக நடிப்பதற்கு வாங்கும் அளவுக்கு அவர் சம்பளம் கேட்டதாக டோலிவுட்டில் ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது. இதன் காரணமாக அதிர்ச்சி அடைந்த அப்படக்குழுவினர் தொடர்ந்து ஸ்ரேயாவிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஏற்கனவே சிரஞ்சீவியுடன் தாகூர் என்ற படத்தில் ஸ்ரேயா ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.