ஆஸ்கர் நாமினேஷனில் 'மகா அவதார் நரசிம்மா' | நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் |

இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜி.வி.பிரகாஷ் தொடர்ந்து முன்னனி நடிகர்கள் படத்திற்கு இசையமைத்து வந்தாலும் அவர் பிஸியாக கதாநாயகனாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது அவர் நடித்து வரும் புதிய படத்தை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, திட்டம் இரண்டு படத்தின் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் தயாராகி வரும் அடியே எனும் படத்தில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
இந்த படத்தில் கதாநாயகியாக 96 படத்தில் நடித்த கவுரி கிஷன் நடித்து வருகிறார். இந்த படம் டைம் மிஷன் கதையை மையப்படுத்தி உருவாகி வருவதால் இதுவரை ஜி.வி பிரகாஷ் நடித்த படங்களிலே இப்படம் தான் பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. இந்த வருடம் ஜூன் மாதத்தில் இப்படத்தை வெளியீட படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.