ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனரை நேரில் அழைத்து பாராட்டிய சூர்யா | தமிழுக்கு வரும் கோமாலி பிரசாத் | குலதெய்வ வழிபாட்டு கதையில் 'ஒண்டிமுனியும் நல்லபாடனும்' |
நடிகர் துல்கர் சல்மான் மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் கதாநாயகனாக நடித்துள்ளார். கடைசியாக அவர் நடிப்பில் தெலுங்கில் வெளியான சீதா ராமம் படம் நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில் இப்போது மீண்டும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளாராம் துல்கர் சல்மான். இந்த படத்தை சமீபத்தில் தனுஷ் நடித்து வெளியான வாத்தி படத்தின் இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்குகிறார்.
மேலும் இந்த படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கின்றனர். ரங்டே, வாத்தி படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக வெங்கி அட்லூரி படத்தை இந்நிறுவனம் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.