அக்கா, தங்கை, அம்மாவாக நடிப்பேன்: ரஜிஷா விஜயன் | அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் பதிவுடன் ஆரம்பம் | அன்றும்... இன்றும்... மணிகண்டனின் தன்னம்பிக்கைப் பதிவு | சினிமா வருமானம் போச்சு: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய சுரேஷ் கோபி முடிவு | மனநல தூதர் ஆனார் தீபிகா | திருத்தங்களுடன் வெளிவருகிறது 'அஞ்சான்' | எனக்கு படங்கள் இல்லையா? : மொய் விருந்தில் ஆவேசமான ஐஸ்வர்யா ராஜேஷ் | 'காந்தாரா' பாணியில் உருவாகும் 'மகாசேனா' | பிளாஷ்பேக்: விஜயகாந்த், கமல் இணைந்து நடித்த ஒரே படம் | பிளாஷ்பேக்: தம்பியை இயக்குனராக்கி அழகு பார்த்த அக்கா |
மாடல் அழகியாக இருந்து நடிகை ஆனவர் ஷாலு ஷம்மு. வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் றெக்க, திருட்டுப்பயலே 2, இரண்டாம் குத்து, ராயர் பரம்பரை உள்பட பல படங்களில் நடித்துள்ளார். சினிமா வாய்ப்புகள் அதிகம் இல்லாவிட்டாலும் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி படங்கள், வீடியோக்களை வெளியிட்டு தனக்கென தனி ரசிகர்களை வைத்திருக்கிறார்.
சென்னை புரசைவாக்கத்தில் வசிக்கும் ஷாலு கடந்த 9ம் தேதி அன்று சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்த பார்ட்டியில் கலந்து கொண்டு விட்டு பின்னர் சூளைமேட்டில் உள்ள தனது தோழி வீட்டில் தங்கி உள்ளார். மறுநாள் எழுந்தபோது அவரது செல்போனை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ஷம்மு நட்சத்திர ஓட்டலுக்கு சென்று கேமரா பதிவு காட்சிகளை ஆராய்ந்து பார்த்தார். அதில் செல்போனை யாரும் எடுக்கும் காட்சி பதிவாகவில்லை. சூளைமேட்டில் தான் தங்கிய தோழி வீட்டிலும் தேடிப்பார்த்தார். அங்கும் கிடைக்கவில்லை.
கடந்த சில நாட்களே தானே தேடிப்பார்த்து விட்டு தற்போது வேறு வழியில்லாமல் பட்டினப்பாக்கம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அப்போது ஓட்டலில் தன்னோடு பார்ட்டியில் கலந்து கொண்டவர்கள், தோழி வீட்டில் தன்னோடு தங்கி இருந்தவர்கள் பட்டியலையும் கொடுத்துள்ளார். அதை வைத்து போலீசார் நண்பர்களிடம் விசாரணையை தொடங்கி உள்ளனர். ஷாலு ஷம்மு தொலைத்த செல்போனின் விலை 2 லட்சம் ரூபாயாம். அந்த போனில் அவர் சம்பந்தப்பட்ட பல விஷயங்கள் உள்ளனவாம்.