பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

விஜய் ஆண்டனி நடிப்பில் 2016ம் ஆண்டு வெளியான படம் பிச்சைக்காரன். நல்ல வரவேற்பை பெற்ற இந்த படத்தை சசி இயக்கி இருந்தார். இதன் இரண்டாம் பாகத்தை கொண்டு வர விஜய் ஆண்டனி விரும்பினார். ஆனால் சசி இயக்க மறுத்துவிடவே தானே இயக்க முடிவு செய்தார். தற்போது இந்த படத்தின் பணிகள் இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளது.
படம் வெளியாக இருக்கும் நிலையில் படத்திற்கு தடைகோரி மாங்காடு மூவீஸ் என்ற நிறுவனத்தின் தயாரிப்பாளர் ராஜகணபதி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் “நான் தயாரித்த 'ஆய்வுகூடம்' என்ற படத்தின் கருவையும், வசனத்தையும் பயன்படுத்தி பிச்சைக்காரன் 2 படம் எடுக்கப்பட்டுள்ளது. எனவே எனக்கு 10 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடாக கொடுத்த பிறகே படத்தை வெளியிட வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு விஜய் ஆண்டனிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வருகிற 12ம் தேதிக்கு தள்ளி வைத்தது.