நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் தற்போது இரண்டாவது பாகம் ஏப்ரல் 28ம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 5 மொழிகளில் வெளியாக உள்ள இந்த படத்தின் அக நக என்ற பாடல் நேற்று வெளியிடப்பட்டு வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் தற்போது பொன்னியின் செல்வன்- 2 படத்தின் பின்னணி இசைப் பணிகள் லண்டனில் உள்ள அபெய் ரோடு ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது . இது குறித்த தகவலை ஏ.ஆர். ரகுமான் சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். அதோடு அங்கு மணிரத்னத்துடன் இணைந்து தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார். முதல்பாகத்தை விட இரண்டாம் பாக இசைப் பணிகள் இன்னும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக லண்டனில் பின்னணி இசைக்கோர்ப்பு பணிகளை உலகதரத்தில் வழங்கி வருகிறார் ரஹ்மான்.