தீனா படத்திற்கு பிறகு மதராஸி படத்தில் வேண்டுதலை நிறைவேற்றிய ஏ.ஆர்.முருகதாஸ் | சிரஞ்சீவி - நயன்தாரா படக்குழுவை சந்தித்த விஜய் சேதுபதி படக்குழு | ஐஸ்வர்யா ராயை தொடர்ந்து அபிஷேக் பச்சன் வழக்கு: புகைப்படத்தை பயன்படுத்த தடை கோரி மனு | மகளின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே | என் அழகான ஜென்டில்மேன் நடிகரே : ரவி மோகனை வாழ்த்திய சுதா கெங்கரா! | நயன்தாரா ஆவணப்படம் வழக்கு : பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு | 2 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகியுள்ள மிடில் கிளாஸ் | அஜித் 64 படத்தை குறித்து புதிய தகவல் இதோ | மகுடம் பட பிரச்சனையை சுமூகமாக தீர்த்த விஷால் | சசி, விஜய் ஆண்டனி படத்தலைப்பு நூறுசாமி |
தமிழ் சினிமாவில் ஒரு தரமான படமாக வந்த படம் 'பிதாமகன்'. பாலா இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில் விக்ரம், சூர்யா, லைலா, சங்கீதா, மற்றும் பலர் நடித்த அந்தப் படம் நடிகர் விக்ரமிற்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றுத் தந்தது.
அப்படத்தைத் தனது எவர்கிரீன் மூவிஸ் இன்டர்நேஷனல் சார்பாக தயாரித்தவர் விஏ துரை. அவர் சத்யராஜ் நடித்த 'என்னம்மா கண்ணு, லூட்டி, விவரமான ஆளு', கார்த்தி நடித்த 'லவ்லி', விஜயகாந்த் நடித்த 'கஜேந்திரா' உள்ளிட்ட படங்களைத் தயாரித்தவர்.
இயக்குனர் எஸ்பி முத்துராமனிடம் உதவி இயக்குனராகவும், ரஜினி நடித்த பாபா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்த படங்களுக்கு தயாரிப்பு நிர்வாகியாகவும் இருந்துள்ளார். தற்போது சர்க்கரை நோயால் மிகவும் பாதிக்கப்பட்டு மோசமான உடல்நிலையில் இருக்கிறார். உடல் மிகவும் இளைத்து அவர்தானா இது என ஆச்சரியப்படும் அளவிற்கு இருக்கிறார்.
'பிதாமகன்' படத்திலேயே பெருத்த நஷ்டத்தைச் சந்தித்தவர், அதற்குப் பிறகு அவர் தயாரித்த படங்களும் ஓடவில்லை. அதனால், படங்களைத் தயாரிப்பதையே நிறுத்தினார். அவருடைய தற்போதைய உடல்நிலை குறித்து அவருடைய நண்பர்கள் சிலர் வீடியோ ஒன்றை சினிமா வாட்சப் குரூப்புகளில் வெளியிட்டுள்ளனர்.
அவருக்குத் தயாரிப்பாளர் சங்கமும், அவர் தயாரித்த படங்களில் நடித்த நடிகர்களும் உதவி செய்ய முன் வர வேண்டும் என திரையுலகில் உள்ள பலரும் எதிர்பார்க்கிறார்கள்.