சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ் படம் | ‛டியூட்'-ல் இடம் பெற்ற ‛கருத்த மச்சானை' நீக்க நீதிமன்றம் உத்தரவு | புயல் மிரட்டும் வேளையிலும் இந்த வாரம் 12 படங்கள் ரிலீஸ் | சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் |

கடந்த வருடம் மலையாளத்தில் குறைந்த பட்ஜெட்டில் வெளியான மூன்று படங்கள் 50 கோடி முதல் 100 கோடி வரை வசூலித்து மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தின. இந்த நிலையில் இந்த வருடம் துவங்கி இரண்டு மாதங்கள் முடிய உள்ள நிலையில் கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி மலையாளத்தில் வெளியான ரொமான்சம் என்கிற படம் தற்போது இந்த வருடத்தின் முதல் படமாக 50 கோடி வசூல் கிளப்பில் இணைந்துள்ளது. சித்து மாதவன் இயக்கிய இந்தப்படத்தை ஜான் பால் ஜார்ஜ் என்பவர் தயாரித்திருந்தார்.
இந்த படத்தை வெளியிடுவதற்கு முன் இந்த படத்தின் தயாரிப்பாளர் ஜான் பால் ஜார்ஜ் ரசிகர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பில், தன்னிடம் இருந்த அனைத்தையும் இந்த படத்தில் முதலீடு செய்து விட்டதாகவும், இந்த படம் ரிலீஸ் மற்றும் வியாபாரம் குறித்து தான் போட்ட கணக்குகள் எல்லாம் சற்றே மாறி தற்போது எல்லாம் முடங்கி ஸ்தம்பித்த நிலையில் இருப்பதாகவும் இந்த படத்திற்காக நீங்கள் டிக்கெட் எடுப்பதற்கு முன்பு யோசிக்கும் அந்த தருணம் தான் எனது வாழ்க்கையை தீர்மானிக்கும் என்றும் இதைவிட அதிகமாக கெஞ்சுவதற்கு எனது தன்மானம் இடம் தரவில்லை என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் இந்த படம் வெளியாகி தற்போது 25 நாட்கள் ஆன நிலையில் கேரளா மற்றும் மற்ற மாநிலங்கள், இது தவிர ஓவர்சீஸ் உரிமை என 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து இந்த வருடத்தில் 50 கோடி வசூலித்த முதல் மலையாள படம் என்கிற பெருமையையும் பெற்றுள்ளது. இந்த படம் வெறும் ஐந்து கோடியில் தயாரானது என்பதும் ஹாரர் கலந்த காமெடி படமாக உருவாகிய இந்த படத்தில் மிகப்பெரிய அளவில் முன்னணி நட்சத்திரங்கள் யாரும் நடிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.




