கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு | 24 லட்சம் வாடகையில் புதிய அபார்ட்மென்ட்டுக்கு குடிபெயர்ந்த ஷாருக்கான் | உடை மாற்ற உதவிக்கு வருவேன் என அடம்பிடித்த போதை நடிகர் : மலையாள நடிகை அதிர்ச்சி தகவல் | ஜெய ஜெய ஜெய ஜெய ஹே ஹிந்தி ரீமேக்கை அமீர்கான் கைவிட்டது ஏன்? : நடிகர் புது தகவல் | மீரா ஜாஸ்மின் பெயர் என் காதுகளில் ஒலிக்காத நாளே இல்லை ; சிலாகித்த நயன்தாரா | கேரள முதல்வரின் சொந்த ஊர் கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் | கிடப்பில் இருக்கும் பிரபுதேவா படத்தை வெளியிட முயற்சி |
தாதா 87, பவுடர் படங்களை தொடர்ந்து மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தை இயக்கி வருகிறார் விஜய் ஸ்ரீ. தற்போது அவர் தசை சிதைவு நோயின் மருந்தை இந்தியா தயாரிக்க வேண்டும் என்கிற கருத்தை முன்னிறுத்தி புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இந்த படத்தை விஆர் இன்டர்நேஷனல் மூவிஸ் சார்பில் ரவி ராயன் தயாரிக்கிறார்.
தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தையின் தாயாக அனித்ரா நாயர் நடிக்கிறார். அவரது மகளாக பேபி வேதாஷ்யா நடிக்கிறார். மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் அமலா பாலின் சகோதரர் அபிஜித் பால், அர்ஜுன் ராஜ், அனித்ரா தந்தையாக ரயில் ரவி, விஜய் டிவி தீபா, சில்மிஷம் சிவா, வில்லனாக ரவி ராயன், பவுடர் ராமராஜன், கே.ஆர்.அர்ஜூன், பேங்க் ராஜேஷ் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. படம் பற்றி இயக்குனர் விஜய்ஸ்ரீ கூறியதாவது: சமீபத்தில் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட கேரளாவை சேர்ந்த குழந்தைக்கு தனது அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாத மனிதர் ஒருவர் ரூ 11 கோடி நன்கொடையாக கொடுத்துள்ளார் என்பதை நாம் அனைவரும் செய்தியில் படித்திருப்போம், பார்த்திருப்போம். இந்த தசை சிதைவு நோயயை குணப்படுத்தும் ஊசியின் விலை ரூ 17.5 கோடியாகும்.
தமிழகத்திலும் இதே தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தைக்கு சமீபத்தில் பலர் உதவி செய்தனர். தசை சிதைவுநோய் பற்றியும் அதன் சிகிச்சைக்கு ஏன் இவ்வளவு செலவு ஆகிறது என்பதையும் மையமாக வைத்து இந்த படம் தயாராகிறது. தசை பிடிப்பு நோயால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தையின் தாய் படும் கஷ்டங்களை குறித்து இந்த படம் பேசும்.
இந்தியா போன்ற அதிக ஜனத்தொகை கொண்ட நாட்டில் இதற்கான ஊசி கிடைப்பதில்லை. இதை அதிக விலை கொடுத்து அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்ய வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலை மாற வேண்டும். சூரியன் மற்றும் சந்திரனுக்கு செல்வது எந்த அளவிற்கு முக்கியமோ அதே போல இந்தியா வல்லரசு நாடாக முன்னேற இது போன்ற உயிர் காக்கும் மருந்துகளை குறைந்த செலவில் உள்நாட்டிலியே தயாரிக்க வேண்டியதும் அவசியம் படப்பிடிப்பு 75 சதவீதம் முடிவடைந்துள்ள நிலையில், படத்தின் தலைப்பு விரைவில் வெளியாகும் என்றார்.