ஸ்லிம்மாக இருக்க ஊசியா : தமன்னா பதில் | நலமாக இருக்கிறேன் : மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் கோவிந்தா | நலமுடன் வீடு திரும்பினார் தர்மேந்திரா | 'கும்கி- 2' படத்திற்கு இடைக்கால தடை போட்ட சென்னை உயர்நீதிமன்றம்! | 'டியூட்' படத்தை அடுத்து ஓடிடிக்கு வரும் 'பைசன்' | ரஜினியின் 'ஜெயிலர்- 2' படத்தில் இணைந்த மேக்னா ராஜ்! | அருள்நிதி, மம்தா மோகன்தாஸ் நடிக்கும் ‛மை டியர் சிஸ்டர்' | விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் ‛ஜெய்பீம்' நடிகை | பாடல் வரிகள், டியூன் தானாக வந்தது, எல்லாம் அவன் செயல் : சத்ய சாய்பாபா பாடல் குறித்து தேவா நெகிழ்ச்சி | ஏ.ஆர் ரஹ்மானுடன் ஜானி மாஸ்டர் புகைப்படம் : சர்ச்சை கேள்விகளுக்கு சின்மயி பதிலடி |

மலையாள திரையுலகில் பிரபல இயக்குனராக இருப்பவர் பி.உன்னிகிருஷ்ணன். கடந்த பத்து வருடங்களில் தொடர்ந்து மோகன்லால் படங்களை இயக்கி அவரது ஆஸ்தான இயக்குனர்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ள இவர் விஷால், ஹன்சிகா, ராசி கன்னா ஆகியோரை தான் இயக்கிய வில்லன் படம் மூலமாக மலையாளத்தில் அறிமுகம் செய்தவரும் கூட.
கடந்த வருடம் மோகன்லால் வைத்து இவர் இயக்கிய ஆராட்டு திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இந்த படம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து மிகுந்த எதிர்பார்ப்புகளை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி, அதேசமயம் அதில் கால்வாசி அளவு கூட நிறைவேற்ற தவறியதால் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் அந்தப்படத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானையும் இசையமைப்பாளராகவே ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கவும் வைத்திருந்தார் .
இன்னும் சொல்லப்போனால் கொரோனா காலகட்டத்தில் இரண்டு வருடங்களாக மோகன்லால் படங்கள் தொடந்து ஓடிடி தளத்தில் வெளியாகி வந்த சமயத்தில் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு தியேட்டரில் வெளியான இந்த ஆராட்டு படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஈடுசெய்ய தவறியது.
இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பி.உன்னிகிருஷ்ணன் கூறும்போது, “ஆராட்டு படத்தின் தோல்விக்கு முழு பொறுப்பையும் நானே ஏற்றுக்கொள்கிறேன். மோகன்லாலுக்கும் கதாசிரியர் உதயகிருஷ்ணாவுக்கும் இதில் எந்த பொறுப்பும் இல்லை. முழுக்க முழுக்க என்னை நம்பி அந்தப் பொறுப்பை ஒப்படைத்து விட்டனர். ரசிகர்களுக்கு நிச்சயமாக பிடிக்கும் என்கிற நம்பிக்கையில் அந்த படத்தை இயக்கினேன். அது பொய்த்து விட்டது..” என்று கூறியுள்ளார்.