'ஜனநாயகன்' வாங்குவதில் வினியோகஸ்தர்கள் தயக்கம் ? | ராஜமவுலி, மகேஷ்பாபு பட தலைப்பு அறிவிப்பு விழா, பிரம்மாண்ட ஏற்பாடுகள் | ரஜினி, கமல் படத்திலிருந்து விலகிய சுந்தர்.சி : மன்னிப்பு கேட்டு அறிக்கை | கொரில்லா பாணியில் நடந்த யெல்லோ படப்பிடிப்பு | தியாகராஜ பாகவதர் கதைக்கும், காந்தாவுக்கும் தொடர்பா? | ரஜினி, கமல் இணையும் படம் : இசையமைப்பாளர் யார்? | பாட்டியாக நடிக்கிறாரா ரோஜா? | பேய் கதைக்கு ‛ரஜினி கேங்' தலைப்பு ஏன்? | ஜி.வி.பிரகாஷின் 100வது படத்தில் பாடிய யுவன் சங்கர் ராஜா | மகன் விஷயத்தில் விஜய் ஒதுங்கி இருக்க இதுதான் காரணமா ? |

கண்ணுக்குள்ளே என்ற தமிழ் படத்தில் அறிமுகமானவர் மலையாள நடிகை அனுமோள். அதன்பிறகு மலையாள படங்களில் நடித்தார். சத்யராஜ் நடித்த 'ஒருநாள் இரவில்' படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்து மீண்டும் தமிழுக்கு வந்தார். தற்போது அவர் 'அயலி' வெப் தொடரில் அயலியின் அம்மாவாக நடித்துள்ளார். பரவலான பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: அயலிக்கு இந்த அளவு வரவேற்பு இருக்குமென நினைக்கவில்லை. எல்லோரும் பாராட்டுகிறார்கள். நினைக்காத இடத்திலிருந்தெல்லாம் பாராட்டு குவிந்து வருகிறது. மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு நாள் இரவில் படத்திற்கு பிறகு நீண்ட இடைவேளை என்றாலும் அயலி நல்ல பேரை வாங்கி தந்துள்ளது. அயலி கதையை கேட்டவுடனேயே இதை மிஸ் பண்ணக்கூடாது என நினைத்தேன். ஏனென்றால் இது எனக்கு தெரிந்த வாழ்க்கை, என் அம்மாவுக்கு எனக்கு நடந்தது. இது சொல்லப்பட வேண்டிய கதை. முத்துக்குமார் அதை அத்தனை அழகாக திரையில் கொண்டு வந்தார்.
இப்போது எங்களுக்கு கிடைத்து வரும் பாராட்டு எல்லோருக்குமானது. எல்லோரும் அவ்வளவு உழைத்திருக்கிறார்கள். ஒரு சில படங்களில் தான் அனைத்தும் நல்லபடியாக நடக்கும் அயலிக்கு அது நடந்துள்ளது. இதில் நானே டப்பிங் பேசினேன் வழக்கு மொழி பேசி நடித்தது புது அனுபவமாக இருந்தது.
அடுத்து, மலையாளத்தில் இரு படங்களும், தமிழில் பர்கானா என்ற படமும் வெளியீட்டிற்கு தயாராக இருக்கிறது. அதுபோக ஒரு சில படங்கள் போஸ்ட் புரொடக்ஷனில் இருக்கிறது. இந்த வருடம் அயலி என்ற ஒரு நல்ல தொடருடன் துவங்கி இருக்கிறது. நல்ல கதைகள் வரும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறேன்.
நான் தமிழ் சினிமாவில்தான் எனது திரைப்பயணத்தை துவங்கினேன். எனது முதல் ஓடிடி வெப் சீரீஸும் தமிழில் தான் அமைந்து இருக்கிறது. அதுபோக தமிழ்மொழி எனக்கு மிகவும் பிடிக்கும். எனக்கும் தமிழ்மொழிக்கும் ஒரு ஈர்ப்பு இருக்கிறது என்று நினைக்கிறேன். என்கிறார் அனுமோள்.