அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
2020 ஆம் ஆண்டு தமிழ், தெலுங்கில் வெளியான சைலன்ஸ் படத்தில் நடித்த அனுஷ்கா அதன் பிறகு தெலுங்கில் நவீன் பாலிஷெட்டியுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. இது தவிர வேறு எந்த புதிய படங்களிலும் அவர் கமிட்டாகவில்லை. இந்த நிலையில் தற்போது அவர் பெங்களூரில் தனது குடும்பத்தாருடன் மகா சிவராத்திரி விழா கொண்டாடிஉள்ளார். அவர் வந்து செல்லும் வீடியோ ஒன்று வைலராகி உள்ளது.
அதில், மிகவும் குண்டாக காணப்படுகிறார் அனுஷ்கா. அவரது இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் பலதரப்பட்ட கமெண்ட்களை கொடுத்து வருகிறார்கள். குறிப்பாக, தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த அனுஷ்கா தற்போது பார்க்கும்போது ஒரு முத்தின ஆன்ட்டி போலவே காணப்படுகிறார். இதற்கு காரணம் இஞ்சி இடுப்பழகி படத்திற்காக வெயிட் போட்டு அவர் ரிஸ்க் எடுத்ததுதான்.
அந்த படத்தில் நடிப்பதற்கு தனது உடல் எடையை அதிகரிக்காமல் இருந்திருந்தால் அவர் இப்படி குண்டாகி இருக்க மாட்டார். தற்போது சினிமாவில் நடித்து வரும் திரிஷா, நயன்தாரா போன்ற நடிகைகளுக்கு டப் கொடுத்திருப்பார். இஞ்சி இடுப்பழகி படத்தில் நடித்து தனது சினிமா கேரியரையே அனுஷ்கா கெடுத்துக் கொண்டார் என்று அந்த வீடியோவில் அவரது குண்டான தோற்றத்தைப் பார்த்து ரசிகர்கள் கமெண்ட் கொடுத்து வருகிறார்கள்.