லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
பிரபல திரைப்பட நடிகையான வினோதினி ப்ரீலேன்சர் வேலையை கூட ப்ரீயாக செய்யாதீர்கள் என அறிவுரை செய்துள்ளார். அவர் அண்மையில் வெளியிட்டுள்ள பதிவில், 'நடிப்பதற்கோ, எழுதுவதற்கோ, கண்டண்ட் கிரியேட் செய்வதற்கோ, நேர்காணலுக்கோ, ஆசிரியர் பணிக்கோ, சிறப்பு விருந்தினராகவோ என எந்த வேலைக்கு என்னை அழைப்பதாக இருந்தாலும் நாங்கள் உங்களுக்கு இவ்வளவு பணம் தருவோம் என்று பேச ஆரம்பியுங்கள். என்னை வைத்து நீங்கள் ஏதோ ஒருவகையில் பணம் சம்பாதிப்பதாக இருந்தால் அதில் எனக்கும் பங்கு வேண்டும். லாப நோக்கில் அல்லாமல் லட்சிய ஆர்வத்திற்காக நீங்கள் ஒரு செயலை செய்வதாக இருந்தால் அதில் நான் இலவசமாக செய்து உங்கள் லட்சயத்தில் பங்கெடுத்து கொள்கிறேன்' என்று கூறியுள்ளார். மேலும், அந்த பதிவில் சில நடிகர்கள் நேர்காணல் கொடுக்க கூட பணம் வாங்குகிறார்கள் அப்படியென்றால் நான் மட்டும் என்ன முட்டாளா? என்றும் நக்கலாக கேட்டுள்ளார்.