11 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் நஸ்ரியா | ஹவுஸ்புல் ஆகும் ஜப்பானியத் திரைப்படம் | கார்மேனி செல்வத்தின் கதை என்ன? | பிளாஷ்பேக்: விஜயகாந்தின் இரட்டை வேட கணக்கை துவக்கிய ராமன் ஸ்ரீ ராமன் | பிளாஷ்பேக் : தேவதாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்ட சவுகார் ஜானகி | நடிப்பும், எழுத்தும் எனது இரு கண்கள்: 'லோகா' எழுத்தாளர் சாந்தி பாலச்சந்திரன் | சரோஜாதேவி, விஷ்ணுவர்தனுக்கு கர்நாடக ரத்னா விருது | பிகினிக்கு வயது ஒரு தடையா ? நோ… | தீபாவளி போட்டியில் 'காந்தா' ? | 14 ஆண்டுகளுக்கு பிறகு தயாராகும் ‛உருமி' இரண்டாம் பாகம் |
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.லக்ஷ்மன் குமார் தயாரிக்கும் படம் தண்டட்டி. ராம் சங்கையாக இயக்கி உள்ளார். கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசை அமைத்துள்ளார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். இதில் ரோகிணி, பசுபதி, தீபா, அம்மு அபிராமி, விவேக் பிரசன்னா, முகேஷ் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
கதை பற்றி தயாரிப்பு தரப்பில் விசாரித்தபோது கிடைத்த தகவல் : இந்த படம் கிராமத்து காமெடி படமாக உருவாகி உள்ளது. கிராமத்து வயது மூத்த பெண்ணான ரோகிணியின் காதில் தொங்கும் தண்டட்டி மீது எல்லோருக்கும் ஒரு கண். அவரும் அதை பற்றி பெருமையாக பேசித் திரிவார். ஒரு நாள் அவர் இறந்து விட அந்த தண்டட்டிக்கு யார் வாரிசு என்பதில் பிரச்னை ஏற்படுகிறது. அதை தீர்த்து வைக்க போலீசான பசுபதி வருகிறார். இதை வைத்து காமெடியாக சொல்லும் படம். அதோடு கிராம மக்களின் வாழ்க்கையில் தங்கம் எந்த அளவுக்கு முக்கியத்தும் பெறுகிறது என்பதையும் பேசும் படம் என்கிறார்கள்.