திருத்தங்களுடன் வெளிவருகிறது 'அஞ்சான்' | எனக்கு படங்கள் இல்லையா? : மொய் விருந்தில் ஆவேசமான ஐஸ்வர்யா ராஜேஷ் | 'காந்தாரா' பாணியில் உருவாகும் 'மகாசேனா' | பிளாஷ்பேக்: விஜயகாந்த், கமல் இணைந்து நடித்த ஒரே படம் | பிளாஷ்பேக்: தம்பியை இயக்குனராக்கி அழகு பார்த்த அக்கா | மம்முட்டி பட இயக்குனருக்கு வெற்றியை தருவாரா சவுபின் சாஹிர் ? | 10 நாள் அவகாசத்துடன் மீண்டும் ஆரம்பமான கன்னட பிக்பாஸ் 12 | விஜய்க்கு பவன் கல்யாண் ஆலோசனை சொன்னாரா? | ஏஆர் முருகதாஸை வறுத்தெடுத்த சல்மான் கான் | காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! |
நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற ஓய்பெற்ற ஜெயிலராக அவர் நடிக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. வருகின்ற தீபாவளிக்கு இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்திற்குப் பிறகு ரஜினியின் அடுத்த படத்தை ஜெய்பீம் படத்தை இயக்கிய டி.ஜே.ஞானவேல் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினி நடிக்கவுள்ளாராம். ஏற்கனவே மூன்று முகம், பாண்டியன், தர்பார் உள்ளிட்ட படங்களில் ரஜினி போலீஸாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.