ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
வம்சி பைடிபள்ளி இயக்கத்தில், விஜய், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடித்த வாரிசு' படம் தெலுங்கில் 'வாரசுடு' என்ற பெயரில் வெளியானது. தமிழில் வெளியான ஜனவரி 11 அன்று வெளியாகாமல் சில நாட்கள் கழித்து ஜனவரி 14ம் தேதியன்று வெளியானது. அதுவே இந்தப் படத்தின் தெலுங்கு வசூலுக்கு சிக்கலை ஏற்படுத்திவிட்டதாகச் சொல்கிறார்கள்.
நேரடி தெலுங்குப் படங்களான 'வால்டர் வீரய்யா, வீரசிம்ஹா ரெட்டி' படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதத்தில் தெலுங்கு வெளியீட்டைத் தள்ளி வைத்தார் தயாரிப்பாளர் தில் ராஜு. முன்னதாக தமிழில் வெளியாகும் போதுதான் தெலுங்கிலும் படத்தை வெளியிடுவேன் என சொல்லி வந்தார். ஆனால், கடைசி நேரத்தில் பின்வாங்கிவிட்டார். அதற்கு அவருக்குக் கொடுக்கப்பட்ட அழுத்தம்தான் காரணம் என்கிறார்கள்.
இரண்டு வாரங்களுக்குப் பிறகு தட்டுத் தடுமாறி இப்போதுதான் 15 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்ட தெலுங்கு உரிமைக்கான 'ஷேர்' தொகையை வசூலித்துள்ளதாம். மொத்த வசூல் 27 கோடி என இருந்தாலும் 'ஷேர்' தொகைதான் படத்தின் லாபக் கணக்கில் சேரும். அந்த விதத்தில் பெரிய நஷ்டம் வராமல் 'வாரசுடு' காப்பாற்றிவிட்டது என கொஞ்சமே கொஞ்சம் மகிழ்கிறார்கள் படத்தை வாங்கியவர்கள்.