'கைதி 2' படத்திற்கு இசை அனிருத்? | சமூக வலைத்தள கொள்ளையர்கள் : IFTPC காட்டம் | பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! |
தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் தனது 42வது படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இதையடுத்து அவர் வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் நடிக்கப் போகிறார். இந்தப் படத்தின் ஆரம்ப கட்டப் பணிகள் ஏற்கனவே தொடங்கி விட்ட நிலையில் தற்போது வாடிவாசல் படத்திற்கான கிராபிக்ஸ் காட்சிகளுக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஹாலிவுட்டில் வெளியான காட்ஷில்லா, அவதார் போன்ற படங்களில் பணியாற்றிய டிஜிட்டல் நிறுவனமே இந்த வாடிவாசல் படத்திற்கும் கிராபிக்ஸ் காட்சிகளை உருவாக்கும் பணியில் தற்போது ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. தற்போது வெற்றி மாறன் விடுதலை படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டதால் இந்த வாடிவாசல் படத்திற்கான கிராபிக்ஸ் பணிகளில் ஈடுபட்டிருக்கிறாராம். அதனால் சூர்யா தனது 42வது படத்தின் படப்பிடிப்பை முடித்ததும் உடனடியாக வாடிவாசல் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளதாம். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தை எஸ். தாணு தயாரிக்கிறார்.