ஜி.வி.பிரகாஷின் 100வது படத்தில் பாடிய யுவன் சங்கர் ராஜா | மகன் விஷயத்தில் விஜய் ஒதுங்கி இருக்க இதுதான் காரணமா ? | 'கும்கி 2' தாமதம் ஏன்?: பிரபு சாலமன் விளக்கம் | தனுஷ் மருமகன் பவிஷ் நடிக்கும் ‛லவ் ஓ லவ்' | காமராஜாரை இழிவுபடுத்துகிறது: 'தேசிய தலைவர்' படத்திற்கு தடைகேட்டு வழக்கு | உருவக்கேலி வலிகளை ஏற்படுத்தும்: பிரீத்தி அஸ்ரானி | பிளாஷ்பேக்: பிரபுவை இயக்கிய சிவாஜி | பிளாஷ்பேக்: சமூக கதையாக மாற்றப்பட்ட இதிகாச கதை | மந்தாகினியாக பிரியங்கா சோப்ரா : முதல் பார்வை போஸ்டர் வெளியீடு | ஸ்லிம்மாக இருக்க ஊசியா : தமன்னா பதில் |

போக்கிரி படத்தில் நடித்தபோது விஜய்யுடன் தனக்கு ஏற்பட்ட ஒரு பிரச்னை காரணமாக கடந்த 15 ஆண்டுகளாக அவரிடத்தில் பேச்சு வார்த்தையே இல்லை என்று தெரிவித்திருக்கிறார் நடிகர் நெப்போலியன். சமீபகாலமாக அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்ட அவர் தற்போது தான் அளித்துள்ள ஒரு பேட்டியில், போக்கிரி படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்த போது ஒரு சம்பவம் நடந்தது. அதன் காரணமாக அப்போதில் இருந்து நானும், விஜய்யும் பேசிக் கொள்வதில்லை.
அவர் நடித்த படங்களையும் நான் பார்ப்பதில்லை. ஆனால் மீண்டும் விஜய்யுடன் பேசுவதற்கு நடிப்பதற்கும் நான் தயாராக இருக்கிறேன். என்றாலும் அவர் என்னுடன் பேசுவதற்கு தயாராக இருக்கிறாரா என்பதை அவரிடம் தான் கேட்க வேண்டும். காரணம் அவர் தனது தாய் தந்தையர் இடத்திலேயே பேசாமல் இருக்கிறார். அமெரிக்கா வரை அந்த செய்தி பரவிக் கொண்டிருக்கிறது. அதனால் முதலில் விஜய் தனது அப்பா அம்மாவுடன் சமரசமாகட்டும். மேலும் எனக்கும் விஜய்க்கும் மோதல் ஏற்பட்டு 15 ஆண்டுகள் ஆகிவிட்டது. இவ்வளவு இடைவெளிக்கு பிறகு அவர் என்னுடன் மீண்டும் பேச தயாராக இருப்பாரா என்று தெரியவில்லை என்றும் அந்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார் நடிகர் நெப்போலியன்.