வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
வினோத் இயக்கத்தில் மூன்றாவது முறையாக அஜித் நடிப்பில் துணிவு படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது. இந்த படத்தில் வில்லன்களுக்காக ரொம்பவும் மெனக்கெடாமல் சார்பட்டா பரம்பரை புகழ் ஜான் கொக்கேன், மற்றும் இன்னொரு துணை வில்லனாக மலையாள நடிகர் சிஜாய் வர்கீஸ் ஆகியயோரை வில்லன் ஆக்கியுள்ளார் இயக்குனர் வினோத். இவர்கள் இருவருமே அந்த கதாபாத்திரங்களுக்கு வெகு பொருத்தமாகவே தங்களது நடிப்பை வழங்கியுள்ளனர். இதில் அஜித் கொள்ளையடிக்க முயற்சிக்கும் சென்னை வங்கியின் சிஇஓ ஆக நடித்திருந்தவர் சிஜாய் வர்கீஸ். இவர் மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த பெங்களூர் டேய்ஸ் படத்தில் பைக் ரேஸ் கோச் ஆக நடித்து ரசிகர்களிடம் அறிமுகமானவர்.
தமிழில் அந்த படம் பெங்களூரு நாட்கள் என வெளியானபோதும் இவர்தான் அதில் கோச்சாக நடித்திருந்தார். அதை தொடர்ந்து 2016 இல் வெளியான முன்னோடி என்கிற படத்தில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆக நடித்திருந்தார். தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் கஜோலின் தந்தையாக போட்டோவில் மட்டும் காட்டப்படுபவராக வந்து சென்றார். அதன்பிறகு தொடர்ந்து மலையாளத்தில் பிஸியாக நடித்துவரும் சிஜாய் வர்கீஸ் தற்போது துணிவு படத்தில் அதிக முக்கியத்துவம் தரும் கதாபாத்திரத்தில் நடித்து மீண்டும் தமிழில் வெளிச்சம் பெற்றுள்ளார். இதை தொடர்ந்து அவருக்கு தமிழில் நல்ல வாய்ப்புகள் தேடி வரும் என எதிர்பார்க்கலாம் .