இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை |
2023 பொங்கலை முன்னிட்டு தமிழில் விஜய் நடித்துள்ள 'வாரிசு', அஜித் நடித்துள்ள 'துணிவு' மற்றும் தெலுங்கில் சிரஞ்சீவி நடித்துள்ள 'வால்டர் வீரய்யா', பாலகிருஷ்ணா நடித்துள்ள 'வீரசிம்ஹா ரெட்டி' ஆகிய படங்கள் வெளியாக உள்ளன.
அமெரிக்காவிலும் இந்த நான்கு படங்களும் அதிக அளவிலான தியேட்டர்களில் வெளியாகின்றன. ஆனால், தமிழ்ப் படங்களான 'வாரிசு, துணிவு' ஆகிய படங்களை விட தெலுங்குப் படங்களான 'வால்டர் வீரய்யா, வீரசிம்ஹா ரெட்டி' ஆகிய படங்களின் முன்பதிவு அதிக அளவில் நடந்து வருகிறது.
பிரிமீயர் காட்சிகளைப் பொறுத்தவரையில் 'வீரசிம்ஹா ரெட்டி' படத்திற்கான முன்பதிவு 3 லட்சம் அமெரிக்க டாலர்களையும், 'வால்டர் வீரய்யா' முன்பதிவு 2 லட்சம் அமெரிக்க டாலர்களையும், 'துணிவு' முன்பதிவு 50 ஆயிரம் அமெரிக்க டாலர்களையும், 'வாரிசு' முன்பதிவு 40 ஆயிரம் அமெரிக்க டாலர்களையும் கடந்துள்ளது.
'வாரிசு' படத்தின் வெளியீட்டுத் தேதி திடீரென மாற்றப்பட்டதால் அதன் முன்பதிவு பின்தங்கி விட்டதாகச் சொல்கிறார்கள். பிரிமீயர் காட்சிகளுக்கு முன்கூட்டியே தியேட்டர்களை ஒப்பந்தம் செய்ய வேண்டுமாம். தேதி மாற்றப்பட்டதால் 'வாரிசு' பட முன்பதிவில் குழப்பம் ஏற்பட்டு அது பின்னடைவைச் சந்தித்துள்ளது.