300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
வம்சி இயக்கத்தில் முதன்முறையாக நடிகர் விஜய் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் நடித்துள்ள படம் ‛வாரிசு'. ராஷ்மிகா நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் சரத்குமார், ஷாம், தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, யோகிபாபு உள்ளிட்ட ஏகப்பட்ட திரைநட்சத்திரங்கள் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார். படம் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில் படத்தின் பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன.
இந்நிலையில் வாரிசு படத்தின் டிரைலர் இன்று(ஜன., 4) மாலை 5மணியளவில் வெளியிடப்பட்டது. 2:28 நிமிடங்கள் ஓடும் இந்த டிரைலர் ஆக் ஷன், குடும்ப சென்டிமென்ட், காமெடி என அனைத்தும் கலந்து விதமாக உருவாகி உள்ளது. டிரைலரை பார்க்கையில் மிகப்பெரிய தொழிலதிபராக சரத்குமார் உள்ளார். அவருக்கு ஷாம், ஸ்ரீகாந்த், விஜய் என மூன்று வாரிசுகள். முதல் இருவர் அப்பாவின் பிசினஸை பார்க்கின்றனர். இவர்களுக்கு இடையூறாக மற்றொரு தொழில் போட்டியாளரான பிரகாஷ்ராஜ் வருகிறார். இதனால் சரத்குமார் குடும்பத்தில் குழப்பம் வருகிறது. குடும்பத்தையும், அப்பாவின் பிசினஸையும் எப்படி விஜய் கட்டிக் காப்பாற்றுகிறார் என்பதே கதையாக இருக்கும் என புரிந்து கொள்ள முடிகிறது.
இந்த டிரைலரில் விஜய் ஆக்ஷன், காதல் குறும்புகள் ஒரு பக்கம் இருந்தாலும் அவர் பேசும் அதிரடி பஞ்ச் வசனங்கள் ரசிகர்களின் கவனம் பெற்றுள்ளன. குறிப்பாக ‛‛எல்லா இடமும் நம்ம இடம் தான். பவர் சீட்டுல இருக்காது, அதுல வந்து ஒருத்தன் உட்காருரானுல அதுலா தான் இருக்கும். நம்ம பவர் அந்த ரகம். அன்போ, அடியோ எனக்கு கொடுக்கும் போது யோசித்து கொடுக்கணும், ஏனா நீ எத கொடுத்தாலும் நான் டிரிபிளா கொடுப்பேன். கிரவுண்ட் மொத்தமும் உன் ஆளுக இருக்கலாம் ஆனால் ஆடியன்ஸ் ஒருத்தன பாப்பாங்க கேள்விப்பட்டு இருக்கியா. ஆட்ட நாயகன்....'' நான் தான்...'' என்பது போன்று அடுக்கடுக்கான அரசியல் கலந்த பஞ்ச் வசனங்களை விஜய் பேசி உள்ளார்.
பொங்கல் பண்டிகையில் வாரிசு உடன் அஜித்தின் துணிவு படமும் வெளியாகிறது. டிரைலரில் இடம்பெற்றுள்ள சில வசனங்கள் அஜித்தை மறைமுகமாக சாடுவது போன்று உள்ளது. டிரைலர் வெளியான அரைமணிநேரத்தில் 25 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகள் கிடைத்தன.