சினிமா வருமானம் போச்சு: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய சுரேஷ் கோபி முடிவு | மனநல தூதர் ஆனார் தீபிகா | திருத்தங்களுடன் வெளிவருகிறது 'அஞ்சான்' | எனக்கு படங்கள் இல்லையா? : மொய் விருந்தில் ஆவேசமான ஐஸ்வர்யா ராஜேஷ் | 'காந்தாரா' பாணியில் உருவாகும் 'மகாசேனா' | பிளாஷ்பேக்: விஜயகாந்த், கமல் இணைந்து நடித்த ஒரே படம் | பிளாஷ்பேக்: தம்பியை இயக்குனராக்கி அழகு பார்த்த அக்கா | மம்முட்டி பட இயக்குனருக்கு வெற்றியை தருவாரா சவுபின் சாஹிர் ? | 10 நாள் அவகாசத்துடன் மீண்டும் ஆரம்பமான கன்னட பிக்பாஸ் 12 | விஜய்க்கு பவன் கல்யாண் ஆலோசனை சொன்னாரா? |
சந்தேகமே இல்லாமல் கடந்த இரண்டு வருடங்களில் தென்னிந்திய அளவில் ரசிகர்கள் அதிகம் விரும்பும் நடிகையாக மாறிவிட்டார் ராஷ்மிகா மந்தனா. குறிப்பாக புஷ்பா படத்தில் அவர் ஆடிய சாமி சாமி பாடல் அவருக்கு அதிக அளவில் ரசிகர்களை தேடித்தந்து விட்டது. இந்த நிலையில் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ள வாரிசு படத்தில் முதன்முறையாக விஜய்யுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் ராஷ்மிகா. சில தினங்களுக்கு முன்பு நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார் ராஷ்மிகா.
இந்த நிகழ்ச்சி முடிந்ததும் அவர் தனது காரில் கிளம்பி சென்றபோது சில ரசிகர்கள் அவரது காரை தங்களது இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து சென்றனர். ஒரு சிக்னலில் நின்றபோது ராஷ்மிகாவின் கார் அருகில் அவரை பார்ப்பதற்காக அந்த ரசிகர்கள் சென்றனர். அப்போது அவர்களை பார்த்த ராஷ்மிகா, “ஹெல்மெட் போட்டு வண்டி ஓட்டுங்க.. இப்பவே போடுங்க” என்று அன்பாக கண்டித்து விட்டு அங்கிருந்து கிளம்பி சென்றார். தன்னுடைய ரசிகர்களின் பாதுகாப்பில் மிகுந்த அக்கறை எடுத்துக் கொள்ளும் ராஷ்மிகாவின் இந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாக பரவி அவருக்கு பாராட்டுக்களையும் பெற்று தந்து வருகிறது.