'பிளாக்மெயில்' புதுவித அனுபவமாக அமைந்தது : தேஜூ அஸ்வினி | 3 நாயகிகள் இணையும் 'தி வைவ்ஸ்' | வேலு பிரபாகரனின் கடைசி படம் | பிளாஷ்பேக் : 450 படங்களுக்கு இசை அமைத்த டப்பிங் கலைஞர் | பிளாஷ்பேக் : சிங்கள சினிமாவின் ஆஸ்தான இசை அமைப்பாளர் | ஆக்ஷன் படங்கள் பண்ண ஆசை : திரிப்தி திம்ரி | திலீப் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடும் மோகன்லால் | 100 கோடி வசூலைக் கடந்த 'சாயரா' | இப்போதே ரூ.25 கோடி அள்ளிய 'ஹரிஹர வீரமல்லு' | சாய் அபயங்கர் இசையமைத்த முதல் டீசர் 'கருப்பு' : ரசிகர்கள் எதிர்பார்ப்பு |
பாலா இயக்கத்தில் நந்தா, பிதாமகன் போன்ற படங்களில் நடித்த சூர்யா, அதன் பிறகு வணங்கான் படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்தது. தெலுங்கு நடிகை கிர்த்தி ஷெட்டி இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். இந்த வணங்கான் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு 40 நாட்கள் கன்னியாகுமரியில் நடந்த நிலையில் அதன் பிறகு படப்பிடிப்பு நடத்தப்படவில்லை. பாலா சொன்ன கதையில் சூர்யாவுக்கு திருப்தி ஏற்படவில்லை என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் வணங்கான் படத்தின் கதையில் தான் செய்த மாற்றங்கள் சூர்யாவுக்கு செட் ஆகவில்லை என்பதால் அவரை இந்த படத்தில் இருந்து விலகிக் கொள்ளுமாறு கூறியதாகவும், அதனால் சூர்யா வணங்கான் படத்தில் இருந்து விலகிவிட்டதாகவும் கடந்த நான்காம் தேதி ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார் இயக்குனர் பாலா. என்றாலும் வணங்கான் படத்தின் பணிகள் தொடருவதாக அவர் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் வணங்கான் படத்தில் சூர்யா நடித்த வேடத்தில் ஏற்கனவே பாலா இயக்கிய பரதேசி படத்தில் நடித்த அதர்வா நடிப்பதாக செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால் இப்போது அந்த வேடத்தில் அருண் விஜய் நடிக்கப் போவதாக இன்னொரு செய்தி வெளியாகியிருக்கிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட நபர்களிடத்தில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.