லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
தமிழில் செம்பருத்தி படத்தில் அறிமுகமானவர் ரோஜா . அதன் பிறகு தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாகி விட்டார். 2002 ஆம் ஆண்டில் இயக்குனர் ஆர்.கே. செல்வமணியை திருமணம் செய்து கொண்ட பிறகு படிப்படியாக படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு ஆந்திர அரசியலில் களம் இறங்கினார். அந்த வகையில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து இரண்டு முறை எம்எல்ஏவான ரோஜா, தற்போது அக்கட்சியில் சுற்றுலா கலாச்சாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டு துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.
இதன் காரணமாக ஆந்திர மாநிலத்தில் நடைபெறும் பல விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்து வரும் ரோஜா, சமீபத்தில் ஒரு கபடி விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தபோது தானும் களத்தில் இறங்கி கபடி விளையாடினார். இந்த நிலையில் தற்போது விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஒரு பாக்சிங் போட்டியை தொடங்கி வைத்துள்ளார் ரோஜா. அப்போது தானும் கைகளில் கிளவுசை மாட்டிக் கொண்டு களத்தில் இறங்கி பாக்சிங் விளையாடி இருக்கிறார். அது குறித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.