பிளாஷ்பேக்: காணாமல் போன நல்ல இயக்குனர் | பிளாஷ்பேக்: முதல் அம்மன் படம் | 'ராமாயணா' படத்தில் ரஹ்மானுடன் இணைந்த ஹாலிவுட் 'ஆஸ்கர்' நாயகன் | 'மண்டாடி' யார்? : இயக்குனர் விளக்கம் | பாடல்கள் ஹிட்டாவதற்கு 'ரீல்ஸ்' வீடியோக்கள்தான் முக்கியமா? | ரஷ்மி முரளி: தோழி நடிகையைத் தேடிய ரசிகர்கள் | விஜய் படம் ரீ-ரிலீசா… அப்போது அஜித் படமும் ரீ-ரிலீஸ்… | விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா தம்பதிக்கு பெண் குழந்தை | WWE-ல் ராணா டகுபட்டிக்குக் கிடைத்த பெருமை | வீர தீர சூரன் ஓடிடி வாங்கிய விலை இவ்ளோதானா? |
தமிழில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி, மீனா நடித்த முத்து படம் முதல் முதலாக ஜப்பான் நாட்டில் வெளியிடப்பட்டது . அந்த படத்திற்கு ஜப்பான் ரசிகர்கள் அமோக ஆதரவு கொடுத்ததோடு அதன்பிறகு ஜப்பானில் ரஜினிக்கு ரசிகர் மன்றங்களும் உருவாகிவிட்டது. அந்த வகையில் முத்து படம் ஜப்பானில் 22 கோடி வசூல் செய்தது. இப்படி ரஜினி படம் ஜப்பானில் வெளியாகி வசூல் சாதனை செய்த பிறகு இந்திய மொழிகளில் உருவான பல படங்களும் ஜப்பானில் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சமீபத்தில் ராஜமவுலி இயக்கிய ஆர்ஆர்ஆர் படமும் ஜப்பான் மொழியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த படத்தை பல கோடி ரூபாய் செலவு செய்து பிரமோஷன் செய்தார்கள். ஆனபோதிலும் ஆர்ஆர்ஆர் படத்தின் மொத்த வசூல் 20 கோடியை தாண்டவில்லையாம். அந்த வகையில் ஜப்பானில் ரஜினியின் முத்து படம் செய்த சாதனையை இதுவரை எந்த இந்திய படங்களாலும் முறியடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.