கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
மலையாள நடிகை மஞ்சிமா மோகனும், தமிழ் நடிகர் கவுதம் கார்த்திக்கும் தேவராட்டம் என்ற படத்தில் இணைந்து நடித்தனர். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டு தற்போது திருமணத்தில் முடிந்துள்ளது. மஞ்சிமா மோகன் பொதுவாக உயரம் குறைவாகவும், எடை கூடுதலாவும் கொண்ட உடலமைப்பு கொண்டவர். இதனால் அவர் நடிக்கத் தொடங்கிய காலத்தில் இருந்தே உருவக்கேலிக்கு ஆளாகி வருகிறார். இடையில் உடல் எடை குறைத்தும் சில படங்களில் நடித்தார். இடையில் சில காலம் நடிப்புக்கு பிரேக் விட்டதில் மீண்டும் எடை கூடிவிட்டார். இதனால் சமூக வலைத்தளங்களில் மீண்டும் உருவக்கேலிக்கு ஆளானார்.
இந்த நிலையில் சமீபத்தில் நடந்த தனது திருமணத்தில்கூட நேரடியான உருவக்கேலிக்கு ஆளானதாக அவர் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக திருமணத்திற்கு பிந்தைய நேர்காணல் ஒன்றில் “ சமூக வலைத்தளங்களில் மட்டும் நான் உருவகேலிக்கு ஆளாகவில்லை. எனது திருமணத்தன்றும் நான் உருவக்கேலிக்கு ஆளானேன். அதை நான் பொருட்படுத்தவில்லை. எனது உடல் எடையில் நான் சவுகரியமாகவே இருக்கிறேன். தேவைப்படும் நேரத்தில் உடல் எடையை குறைக்கவும் என்னால் முடியும்” என்று கூறியிருக்கிறார்.