ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
கடந்த ஆண்டு வெளிவந்த ‛தேன்' படம் நல்ல வரவேற்பையும், பாராட்டுகளையும், பல விருதுகளையும் பெற்றது. கணேஷ் விநாயகம் இயக்கி இருந்த இந்த படத்தில் தருண் குமார், அபர்ணதி, அருள்தாஸ் உள்பட பலர் நடித்திருந்தார்கள். எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்திருந்தார், சனத் பரத்வாஜ் இசை அமைத்திருந்தார்.
இந்த படத்தின் இயக்குனர் கணேஷ் விநாயகன் தனது அடுத்து படம் குறித்து அறிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: மக்களிடம் தேன் எப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியதோ அதே போல் எனது அடுத்த படைப்பும் கண்டிப்பாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும், இது அடித்தட்டு மக்கள் முதல் மேல் தட்டு மக்கள் வரை சரியாக சென்றடையும்.
பலதரப்பட்ட திரைப்பட திரைப்பட வல்லுர்களிடம் இந்த கதையை ஒப்படைத்தபோது அவர்கள் படித்துவிட்டு இது இந்திய மக்களிடம் மட்டுமின்றி உலக மக்களிடம் சரியாக சென்றடையும் என்று பாராட்டியுள்ளார்கள். இதுவும் விருதை நோக்கி நகர்கிறதா என்று எனக்கு தெரியாது, கண்டிப்பாக மக்களுக்கான படமாக இது இருக்கும். இதற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளோம். இதற்கான நடிகர்கள் தேர்வும் நடந்து கொண்டிருக்கிறது என்கிறார்.