நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

மாநகரம், கைதி, மாஸ்டர் படங்களை தொடர்ந்து கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தை அடுத்து தற்போது விஜய்யின் 67வது படத்தை இயக்குவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். இப்படத்தில் வில்லன்களாக அர்ஜுன், சஞ்சய்தத், பிருத்திவிராஜ், கவுதம் மேனன் மற்றும் திரிஷா உள்ளிட்ட பலர் நடிப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. மேலும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான கமல்ஹாசன், விஜய், சூர்யா, கார்த்தி, விஜய் சேதுபதி என பல நடிகர்களை இயக்கிவிட்ட லோகேஷ் கனகராஜ், அஜித்குமாரை எப்போது இயக்குவார் என்கிற கேள்விகளும் எழுந்திருக்கிறது.
இப்படியான நிலையில் அவர் அளித்த ஒரு பேட்டியில், அஜித்குமாரின் பர்பாமென்ஸ் குறித்து தன்னை பாதித்த சில கதாபாத்திரங்களையும் குறிப்பிட்டு இருக்கிறார். அதோடு அஜித் நடித்த படங்களை ரீமேக் செய்ய வேண்டுமென்றால் எந்த படத்தை இயக்குவீர்கள்? என்று அவரிடத்தில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, அஜித்தின் தீனா படம் என்னை அதிகம் பாதித்துள்ளது. அதனால் அஜித் நடித்த படங்களில் ரீமேக் செய்வதாக இருந்தால் தீனா படத்தைதான் ரீமேக் செய்வேன் என்று அந்த பேட்டியில் கூறியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.