ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் | 10 மில்லியன் வியூஸ் - தமன்னா சாதனையை முறியடிப்பாரா பூஜா ஹெக்டே | விக்னேஷ் சிவனை பிரிவதாக வதந்தி : போட்டோவால் பதில் சொன்ன நயன்தாரா | தமிழில் மீண்டும் நடிக்கும் அன்னா பென் | சூர்யா சேதுபதியின் வாழ்க்கையில் விளையாடாதீர்கள் : அனல் அரசு வேண்டுகோள் |
ஹரி இயக்கிய யானை படத்தை அடுத்து தற்போது ஏ.எல்.விஜய் இயக்கும் அச்சம் என்பது இல்லையே என்ற படத்தில் நடித்திருக்கிறார் அருண் விஜய். இந்த நிலையில் நேற்று அவர் தனது 45வது பிறந்த நாளை சென்னையில் உள்ள உதவும் கரங்கள் ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார். அதோடு அங்குள்ள குழந்தைகளுக்கு உணவு வழங்கியதோடு தானும் மதிய உணவை அந்த குழந்தைகளுடன் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்திருக்கிறார் அருண் விஜய்.
மேலும் நேற்றைய தினம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் ரத்த தானமும் செய்திருக்கிறார் அருண் விஜய். அவர் மட்டுமின்றி அவரது ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்களும் அரசு மருத்துவமனை ரத்த வங்கியில் ரத்ததானம் செய்துள்ளார்கள். ஆதரவற்ற குழந்தைகளுடன் இணைந்து அருண் விஜய் பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.