மே 9ல் ரிலீஸ் ஆகும் திலீப்பின் 150வது படம் | ஓடிடி.,க்கு அதிக விலைக்கு போன டாப் தமிழ் படங்கள் | 20 ஆண்டுகளாக தோழிகளாக வலம்வரும் திரிஷா - சார்மி! | 'குபேரா' படத்தின் புதிய அப்டேட்! | அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! |
அருண் விஜய் நடிப்பில் யானை மற்றும் சினம் ஆகிய படங்கள் சமீபத்தில் வெளியான நிலையில் தற்போது ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அச்சம் என்பது இல்லையே என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக லண்டன் நடிகை எமி ஜாக்சன் நடிக்கிறார். ஜி.வி .பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்றைய தினம் அருண் விஜய்யின் 45வது பிறந்தநாள் என்பதால் படக்குழு அச்சம் என்பது இல்லையே படத்தின் முதல்பார்வை போஸ்டர்களை வெளியிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறது. அதில் ஒரு போஸ்டரில் அருண்விஜய் மட்டுமே இடம்பெற்றிருக்க, இன்னொரு போஸ்டரில் ஒரு சிறுமியுடன் நின்று கொண்டிருக்கிறார். இந்த போஸ்டர்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது .