பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
அண்ணாத்த படத்திற்கு பின் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் ‛ஜெயிலர்'. நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் ஐதராபாத்தில் துவங்கியது. படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் கன்னட சினிமாவின் முன்னணி நடிகரான சிவராஜ்குமார் நடிப்பதாக ஏற்கனவே செய்திகள் வந்தன. சிவராஜ்குமாரும் தான் ரஜினி உடன் நடிப்பதை உறுதி செய்திருந்தார்.
இந்நிலையில் இன்று(நவ., 17) அவர் நடிப்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். படப்பிடிப்பு தளத்திலும் அவர் பங்கேற்று வருகிறார். அதை குறிப்பிடும் விதமாக ‛ஜெயிலர் படப்பிடிப்பு தளத்தில் சிவராஜ்குமார்'' என குறிப்பிட்டு அவரது போட்டோவை வெளியிட்டுள்ளனர்.