மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
திமுகவின் இளைஞர் அணி செயலாளராக இருந்து வரும் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கம் தொகுதியின் எம்எல்ஏ ஆகவும் இருக்கிறார். சினிமாவிலும் நடித்து வரும் இவர் பல திரைப்படங்களை தனது ரெட் ஜெயன்ட் மூவிஸ் மூலமாக வாங்கி விநியோகமும் செய்கிறார். ஆனால் இப்படி மற்ற நடிகர்களின் படங்களை வாங்கி விநியோகம் செய்வதை நிறுத்தி விடலாம் என்று கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பே முடிவு எடுத்தாராம் உதயநிதி.
இதுகுறித்து அவர் ஒரு பேட்டியில் கூறுகையில், நான் நல்ல படங்களாக தங்களது படங்களை வாங்கி வெளியிடுமாறு கேட்டுக்கொண்ட தயாரிப்பாளர்களின் படங்களை மட்டுமே வெளியிட்டு வருகிறேன். ஆனால் உதயநிதி மிரட்டி படங்களை வாங்கி வருவதாக ஒரு தகவல் வெளியானது. அதையடுத்து எனது தந்தை என்னை அழைத்து, இது தேவை இல்லை என்று என்னிடத்தில் கூறினார். கெட்ட பெயர் வேண்டாம் என்று விநியோகம் செய்வதை விட்டு விடலாம் என்று முடிவெடுத்தேன். ஆனால் நாங்கள் இப்படி ஒரு முடிவெடுத்த நேரம், இதை கேள்விப்பட்ட கமல் சார், என் தந்தையை தொடர்பு கொண்டு, உதயநிதியை தொடர்ந்து படங்களை விநியோகம் செய்ய சொல்லுங்கள். அவர் வந்த பிறகுதான் சினிமா நன்றாக இருக்கிறது. வெளிப்படை தன்மையோடு உண்மையான கணக்குகளை கொடுக்கிறார். இது படங்களுக்கும் தமிழ் சினிமாவுக்கும் ரொம்ப நல்ல விஷயம் கூறியிருக்கிறார். அதன் பிறகுதான் நிறைய படங்கள் இல்லாமல் குறைவான படங்களை வாங்கி விநியோகம் செய்யுமாறு என் தந்தை கூறினார். அதன் காரணமாகவே தொடர்ந்து குவாலிட்டியான நல்ல படங்களை மட்டுமே வெளியிட்டு வருகிறேன் என்று அந்த பேட்டியில் கூறியிருக்கிறார் உதயநிதி.