ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு | இருமனம் ஒருமனமான தருணம்... : 2025ல் கெட்டிமேளம் கொட்டிய திரைப்பிரபலங்கள்...! | பிளாஷ்பேக்: புதுமுகங்களின் அணிவகுப்பில் புதுமை படைத்த “பொண்ணுக்கு தங்க மனசு” | பான் இந்தியா அளவில் முன்னேறிச் சென்றது தனுஷ் மட்டுமே… | ராதிகா சரத்குமார் கொடுத்த கிறிஸ்துமஸ் 'லன்ச்' விருந்து | தள்ளிப் போகிறதா 'பராசக்தி' தெலுங்கு ரிலீஸ்? | நிலத்தில் உழவு செய்த சல்மான் கான், தோனி | பாதிக்கப்பட்டவரை குற்றம் சாட்டுவதா ? நிதி அகர்வால் கமெண்ட் |

2023ம் ஆண்டின் முதல் பெரிய ரிலீசாக பொங்கலுக்கு வெளியாகும் படங்கள் இருக்கப் போகிறது. அன்றைய தினம் தமிழ் சினிமாவில் அதிக இளம் ரசிகர்களை தங்கள் வசம் வைத்துள்ள விஜய், அஜித் ஆகியோரது படங்கள் வெளியாகிறது.
விஜய்யின் 'வாரிசு', அஜித்தின் 'துணிவு' ஆகிய இரண்டு படங்களும் தமிழகத்தில் இருக்கும் அத்தனை தியேட்டர்களையும் ஆக்கிரமித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இவர்கள் இருவரது படங்களும் கடைசியாக 2014ம் ஆண்டு பொங்கலுக்கு நேரடியாக மோதின. கடந்த எட்டு வருடங்களில் இருவரது பிரபலம், இமேஜ், புகழ் ஆகியவை இன்னும் அதிகரித்துள்ளது. அதற்குப் பிறகு அவர்கள் கொடுத்த சில ஹிட்டுக்கள் தமிழ் சினிமாவி அதிக வசூலைக் குவித்த படங்களாகவும் இருந்தன.
இந்நிலையில் 'துணிவு, வாரிசு' ஆகிய படங்களின் வியாபாரம் பரபரப்பாக ஆரம்பமாகியுள்ளது. 'துணிவு' படத்தின் தமிழக வெளியீட்டை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் வாங்கிவிட்டது. 'வாரிசு' படத்திற்கும் அந்நிறுவனமே தியேட்டர்களை போட்டுத் தர உள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் கூட 'பொன்னியின் செல்வன்' படத்திற்கும் அப்படித்தான் செய்தார்களாம்.
'வாரிசு, துணிவு' படங்களின் அமெரிக்க வெளியீட்டு உரிமை உட்பட வெளிநாட்டு உரிமைகள், மற்ற மாநில உரிமைகள் ஆகியவற்றிற்கான வியாபாரம் ஆரம்பமாகிவிட்டதாக கோலிவுட்டில் பரபரக்கிறார்கள். அடுத்த சில நாட்களுக்கு இந்த ஏரியா இத்தனை கோடி, அந்த ஏரியா அத்தனை கோடி என தகவல்கள் வந்து கொண்டே இருக்கும். சமூக வலைத்தளங்களிலும் ஏட்டிக்குப் போட்டியான சண்டைகள் ஆரம்பமாகும். ஸ்டார்ட் மியூசிக்…….