மம்முட்டி பட இயக்குனருக்கு வெற்றியை தருவாரா சவுபின் சாஹிர் ? | 10 நாள் அவகாசத்துடன் மீண்டும் ஆரம்பமான கன்னட பிக்பாஸ் 12 | விஜய்க்கு பவன் கல்யாண் ஆலோசனை சொன்னாரா? | ஏஆர் முருகதாஸை வறுத்தெடுத்த சல்மான் கான் | காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? |
தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளில் இரண்டாம் பாகப் படங்கள் குறிப்பிடத்தக்க அளவில் வர ஆரம்பித்தது. பெரும் வெற்றி பெற்ற சில படங்களின் இரண்டாம் பாகங்களாக எடுக்க வேண்டும் என்று சிலர் எடுத்தார்கள். அவற்றில் சில வெற்றி பெற்றன, சில தோல்வியடைந்தன. இருந்தாலும் புதிதாக எந்த ஒரு படம் வெற்றியடைந்தாலும் இரண்டாம் பாகம் வருமா என்ற கேள்வியை பலரும் எழுப்புவது வழக்கம்.
அந்த விதத்தில் கார்த்தி நடித்து தீபாவளிக்கு வந்துள்ள 'சர்தார்' படத்தின் இரண்டாம் பாகம் வரும் என நேற்று நடைபெற்ற சக்சஸ் மீட்டில் கார்த்தி தெரிவித்திருந்தார். கார்த்தி நடித்து அடுத்த வருடம் 'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டாம் பாகம் வர உள்ளது. அதற்கடுத்து 'கைதி' படத்தின் இரண்டாம் பாகத்தை அடுத்த வருடம் ஆரம்பிக்க உள்ளோம் என்றும் கார்த்தி நேற்று சொன்னார். 'சர்தார்' படத்தின் இரண்டாம் பாகமும் வரும் என்றும் சொன்னதால் அடுத்தடுத்து மூன்று இரண்டாம் பாகப் படங்களில் கார்த்தி நடிக்கப் போகிறார்.
தமிழில் அடுத்தடுத்து இரண்டாம் பாகப் படங்களில் வேறு எந்த ஒரு நடிகரும் நடித்தது இல்லை. 'பொன்னியின் செல்வன் 2' அடுத்த வருடம் கண்டிப்பாக வந்துவிடும். 'கைதி மற்றும் சர்தார்' ஆகியவற்றின் இரண்டாம் பாகம் சொன்னபடி நடந்தால் அது சிறப்பான விஷயம்தான்.