சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

காலா, விஸ்வாசம், அரண்மனை 3 ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் புகழ்பெற்றவர் சாக்ஷி அகர்வால், சில சிறு பட்ஜெட் படங்களில் ஹீரோயினாகவும் நடித்திருக்கிறார். சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்கி வரும் பிரபலங்களின் வரிசையில் முன்னணியில் இருக்கும் சாக்ஷி அகர்வால் அடிக்கடி தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பு கிளப்புவார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: பட வாய்ப்பிற்காக கவர்ச்சி படங்களை பதிவிடவில்லை என்பதை முதலில் தெளிவுபடுத்துகிறேன். என்னுடைய சமூக வலைதள பக்கத்தை கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் ரசிகர்கள் பின்தொடர்பாளர்களாக இருக்கிறார்கள். இவர்களுடனான உறவையும், நட்பையும் ஆரோக்கியமாக பேணுவதற்கு புகைப்படங்களை பதிவிடுகிறேன். தொடர்ந்து சமூகம் குறித்த ஆக்கபூர்வமான விசயங்களையும் பகிர்ந்து கொள்கிறேன்.
தற்போது பிரபுதேவா நடிப்பில் தயாராகி இருக்கும் 'பஹிரா' மற்றும் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் சமுத்திரக்கனி நாயகனாக நடிக்கும் 'நான் கடவுள் இல்லை' என்ற இரண்டு படங்களின் பணிகளை நிறைவு செய்திருக்கிறேன். 'கெஸ்ட் - சாப்டர் 2' எனும் அனிமல் திரில்லர் ஜானரிலான படத்தில் கதையின் நாயகியாக நடித்து வருகிறேன்.
அறிமுக இயக்குநர் விக்கி இயக்கத்தில் தயாராகி வரும் பெயரிடப்படாத படத்தில் சந்தோஷ் பிரதாப்புக்கு ஜோடியாக அழுத்தமான வேடத்தில் நடித்து வருகிறேன். இதை தொடர்ந்து 'கந்தகோட்டை' படத்தை இயக்கிய இயக்குநர் சக்தி இயக்கத்தில் தயாராகி வரும் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறேன்.
கதைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலான படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு தொடர்ச்சியாக வருகிறது. இதில் இரண்டு மலையாள படங்களில் கதைகளை தேர்வு செய்து நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறேன். தமிழிலும் கதையின் நாயகியாக நடிப்பதற்கான வாய்ப்புகள் வருகின்றன. அவற்றில் எனக்கு பொருத்தமான கதைகளையும், கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடிக்க திட்டமிட்டிருக்கிறேன். என்கிறார் சாக்ஷி.




