ட்வின்ஸை வரவேற்க தயாராகும் ராம்சரண், உபாசனா தம்பதி | முத்தக்காட்சிக்கு செட் ஆகாத விஷ்ணு விஷால் | விவசாயத்தை விட சினிமா எடுப்பது கஷ்டம் : புதுமுக இயக்குனர் | கவிஞர் வாலி விருது பெறும் கங்கை அமரன் | எழுத்தாளர் பூமணியின் கசிவு கதையில் நடித்த எம்.எஸ்.பாஸ்கர் | மீண்டும் ஹீரோவான ஆனந்த்ராஜ் | போலீஸ் கமிஷனரிடம் அம்பிகா வைத்த கோரிக்கை | போதை பொருள் விவகாரம் : ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு சம்மன் | பிளாஷ்பேக் : சபரிமலையில் படப்பிடிப்பு ; நடிகைகளுக்கு அபராதம் | பிளாஷ்பேக் : சினிமாவான கல்கியின் சமூக கதை |

தெலுங்கில் முதன்முறையாக வாரிசு என்ற படத்தில் நடித்து வரும் விஜய் கிட்டத்தட்ட அந்த படத்தின் படப்பிடிப்பை சில நாட்களுக்கு முன்பே முடித்திருந்தார். இந்தநிலையில் மீதமிருந்த ஒரு பாடல் காட்சியும் சமீபத்தில் படமாக்கப்பட்டது. இதைதொடர்ந்து தற்போது வாரிசு படத்தில் தனது பணிகள் அனைத்தையும் முடித்துக் கொடுத்துவிட்ட விஜய் நேற்று அதிகாலை துபாய் கிளம்பி சென்றார்.
விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தற்போது துபாயில் படித்து வருகிறார். இந்தநிலையில் மகனுடன் இணைந்து தீபாவளியை கொண்டாடுவதற்காக துபாய்க்கு கிளம்பி சென்றுள்ளார் விஜய். விமான நிலையத்திற்குள் விஜய் நடந்து சென்ற வீடியோ வைரலானது.




