தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த 'பொன்னியின் செல்வன்' படம் பற்றி சமூக வலைத்தளங்களில் இன்னமும் பல விமர்சனங்கள், கருத்துக்கள், தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. தாங்கள் பார்த்து ரசித்தவை, நாவலில் உள்ளது படத்தில் இல்லாதது, படத்தில் பலரும் கவனிக்கத் தவறியது என விதவிதமாக பதிவிட்டு வருகிறார்கள் ரசிகர்கள்.
அந்த விதத்தில் படத்தில் குந்தவையை முதன் முதலில் சந்திக்க, சேந்தன் அமுதனுடன் வந்தியத் தேவன் செல்லும் காட்சியில், குந்தவை, சேந்தன் அமுதன், செம்பியன் மாதேவி ஆகிய மூவரும் இருக்கும் ஒரு புகைப்படத்தை ரசிகர் ஒருவர் பதிவிட்டு, “இப்படியான சின்ன டீடெய்லிங்கைக் கூட தியேட்டரில் படம் பார்க்கும் போது நான் கவனிக்கவில்லை,” எனக் குறிப்பிட்டிருந்தார்.
செம்பியன் மாதேவியன் மகன்தான் சேந்தன் அமுதன். ஆனால், அரண்மனையில் வசிக்காமல் சிவபெருமானுக்குச் சேவை செய்பவராக இருக்கிறார். அவர் சோழ வாரிசு என்பது கதைப்படி பின்னர்தான் தெரிய வரும். படத்தில் குந்தவையின் அறிமுகக் காட்சியில் அவருக்கு அருகில் அமர்ந்திருக்கும் செம்பியன் மாதேவி, சேந்தன் அமுதன் ஒருவருக்கொருவர் பாசத்துடன் பார்த்துக் கொள்வது இடம் பெற்றிருக்கும். படம் பார்க்கும் போது அந்த டீடெய்லிங்கைப் பலரும் கவனித்திருக்க மாட்டார்கள்.
ரசிகர் குறிப்பிட்ட அந்த டீடெய்லிங் பற்றிய பதிவை சேந்தன் அமுதன் ஆக நடித்துள்ள அஷ்வின் பகிர்ந்து ''யாரும் இதை கவனிக்கவில்லை. எல்லோரும் குந்தவையை கவனிப்பதிலேயே பிஸியாக இருந்ததே இதற்குக் காரணம்,” எனக் குறிப்பிட்டிருந்தார். அஷ்வினின் பதிவிற்கு குந்தவை ஆக நடித்திருக்கும் திரிஷா, “நான் கவனித்தேன்,” என பதில் கொடுத்திருக்கிறார்.
பல ரசிகர்கள் அந்த டீடெய்லிங் என்ன என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்நேரம் பலரும் கூகுள் செய்து யார் சேந்தன் அமுதன் என தேடிப் படித்திருப்பார்கள். சேந்தன் அமுதன்தான் பிற்காலத்தில் உத்தம சோழனாக 15 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். அவருக்குப் பிறகுதான் ராஜராஜன் ஆக பெயர் பெற்ற அருள்மொழி வர்மன் சோழ தேசத்தை ஆட்சி செய்தார்.