ரஞ்சித், ஆர்யா படப்பிடிப்பில் சண்டை கலைஞர் மரணம் | ஆள் வச்சி அடிச்ச மாதிரி டார்ச்சர் இருந்தது: 'தலைவன் தலைவி' படப்பிடிப்பு அனுபவம் குறித்து விஜய் சேதுபதி | பிளாஷ்பேக்: டாக்டர் படிப்பை கைவிட்டு ஆக்டர் ஆன கோட்டா சீனிவாசராவ் | பிளாஷ்பேக்: மெல்லிசை மன்னரின் 10ம் ஆண்டு நினைவு: விருதுகளை கடந்த கலைஞன் | சரோஜாதேவி மறைவு: முதல்வர், திரைப்பிரபலங்கள் இரங்கல் | சிவாஜிகணேசன் - சரோஜா தேவி இணைந்த நடித்த படங்கள் | எம்ஜிஆர் - சரோஜா தேவி இணைந்து நடித்த 26 படங்கள் | சூப்பர் குட் பிலிம்ஸ் 99வது தயாரிப்பில் விஷால் | 'தாமரை நெஞ்சம்' ஒரு படம் போதுமே: பாலசந்தர் அளித்த பதில் | தமிழில் தனது கடைசி படத்தில் நடித்த சரோஜா தேவி |
தீபாவளியை முன்னிட்டு இந்த வருடம் கார்த்தி நடிக்கும் 'சர்தார்', சிவகார்த்திகேயன் நடிக்கும் 'பிரின்ஸ்' ஆகிய படங்கள் நாளை மறுதினம் அக்டோபர் 21ம் தேதி வெளியாக உள்ளன. தமிழில் உருவாகியுள்ள இந்த இரண்டு படங்களும் தெலுங்கிலும் டப்பிங் ஆகி அதே பெயரில், அதே தினத்தில் வெளியாகின்றன.
'பிரின்ஸ்' படத்தை தெலுங்கு இயக்குனரான அனுதீப் இயக்கி உள்ளார். தெலுங்கு படத்திற்கான வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்ச்சி நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா, இயக்குனர் ஹரிஷ் சங்கர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இன்று 'சர்தார்' தெலுங்கு படத்திற்கான வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்வு இன்று ஐதராபாத்தில் நடைபெற உள்ளது. அதில் நடிகர் நாகார்ஜுனா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார். 'தோழா' படத்தில் நாகார்ஜுனா, கார்த்தி இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.
தமிழில் மோதிக் கொள்ளும் 'சர்தார், பிரின்ஸ்' படங்கள் தெலுங்கிலும் மோதிக் கொள்கின்றன. கார்த்திக்கு தெலுங்கில் ஏற்கெனவே நல்ல அறிமுகம் உண்டு. சிவகார்த்திகேயனின் சமீபத்திய படங்கள்தான் தெலுங்கில் டப்பிங் ஆகி வெளியாகின்றன. இரண்டு மொழிகளிலும் இந்தப் படங்கள் எப்படி வரவேற்பைப் பெறப் போகின்றன என்பதைப் பார்க்க ரசிகர்களும், திரையுலகினரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.