ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
நடிகை ராஷ்மிகா தற்போது தென்னிந்திய அளவில் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் கால்பதித்து மிக பிஸியான நடிகையாக வலம் வருகிறார். தற்போது தெலுங்கில் உருவாகும் வாரிசு படத்தில் விஜய்யுடன் நடித்து வரும் அவர் ஹிந்தியில் குட்பை மற்றும் மிஷன் மஞ்சு ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதில் குட்பை திரைப்படம் அக்-17ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் அந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்காக மும்பை ஐதராபாத் என பறந்து கொண்டிருக்கிறார் ராஷ்மிகா மந்தனா. இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே முழங்கால் வலியால் அவதிப்பட்டு வருகிறார் ராஷ்மிகா.
இதைத்தொடர்ந்து விஜயவாடாவில் உள்ள பிரபல மூட்டுவலி சிகிச்சை நிபுணர் டாக்டர் கவுரவ் ரெட்டி என்பவரை சந்தித்து சிகிச்சை பெற்றுள்ளார் ராஷ்மிகா. இந்த தகவலை வெளியிட்டுள்ள டாக்டர் கவுரவ் ரெட்டி, “நான் ராஷ்மிகாவிடம் பேசும்போது நீங்கள் நடனமாடும்போது உங்கள் மொத்த எடையையும் முழங்காலில் இறக்கி வைத்து விடுவதால் இப்படி கால்வலி வருகிறது என விளையாட்டாக கூறினேன். மற்றபடி புஷ்பா படத்தில் சாமி சாமி பாடல் பாடலுக்கு அவர் நடனம் ஆடியதை பாராட்டினேன். ராஷ்மிகாவை தொடர்ந்து அடுத்ததாக தோள்பட்டை வலியுடன் அல்லு அர்ஜுனும் விரைவில் என்னிடம் வருவார் என எதிர்பார்க்கிறேன்” என்று நகைச்சுவையாக கூறியுள்ளார் டாக்டர் கவுரவ் ரெட்டி.