ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
வினோத் இயக்கத்தில் அஜித் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் ‛துணிவு'. நாயகியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார். முக்கிய வேடத்தில் சமுத்திரகனி நடிக்கிறார். வங்கி கொள்ளை தொடர்பான கதையில் உருவாகும் இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.
சமீபத்தில் இந்த படப்பிடிப்புக்கு ஓய்வு கொடுத்துவிட்டு லடாக் பகுதிகளில் தனது பைக் குழுவினர் உடன் சுற்றுபயணம் மேற்கொண்டார் அஜித். அது தொடர்பான போட்டோக்கள், வீடியோக்கள் தினமும் வெளியாகி வைரலாகி வந்தன. சில தினங்களுக்கு முன்னர் பட தலைப்பான துணிவு அறிவிக்கப்பட்டு ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
இந்நிலையில் துணிவு படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக அஜித், மஞ்சு வாரியர் பாங்காக் புறப்பட்டு சென்றனர். இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகி உள்ளன. பாங்காக்கில் அதிரடியான பைக் ஸ்டன்ட் காட்சி படமாக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதோடு துணிவு படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடையும் என தெரிகிறது. டிசம்பர் மாத இறுதியில் அல்லது பொங்கலுக்கு படம் வெளியாக வாய்ப்புள்ளது.