நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

நடிகை நயன்தாரா கடந்த ஜூன் மாதம் 9 ஆம் தேதி மாமல்லபுரத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். பிரம்மாண்டமாக நடைபெற்ற இவர்கள் திருமணத்தில் ரஜினிகாந்த், ஷாருக்கான், விஜய் சேதுபதி, சரத்குமார், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பல திரைத்துறை பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
மேலும் திருமணத்திற்கு பிறகு தாய்லாந்துக்கு ஹனிமூன் சென்ற இந்த தம்பதியினர் அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர். இதனிடையே திருமண நிகழ்வை ஒளிபரப்ப நெட்பிளிக்ஸ் நிறுவனத்திடம் பல கோடிக்கு விலை பேசி உள்ளாததால் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமண வீடியோ விரைவில் வெளியாக உள்ளதாக நெட்பிளிக்ஸ் நிறுவனம் ப்ரோமோ வெளியிட்டு அறிவித்துள்ளனர் .