துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து விக்ரம் நடித்த கோப்ரா படத்தையும் இயக்கினார். நீண்ட நாள் இந்த படம் தயாரிப்பில் இருந்தது. பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படத்தில் விக்ரம் பலவித வேடங்களில் நடித்திருந்தார். இந்த படத்தின் மீது விக்ரம் பெரிய நம்பிக்கை வைத்திருந்தார். இதற்காக தென்னிந்தியா முழுக்க சுற்றுப் பயணம் சென்று படத்தை விளம்பரப்படுத்தினார்.
அஜய் ஞானமுத்து மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்த விக்ரம், பல மேடைகளில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் மீண்டும் நடிப்பேன். அந்த படம் விரைவில் துவங்கும் என்று அறிவித்தார். இதற்காக விக்ரம் தயாரிப்பாளரையும் தயார் செய்து விட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் கோப்ரா எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. அதோடு கடும் விமர்சனங்களையும் எதிர்கொண்டது. 3 ஹீரோயின்கள், ஏ.ஆர்.ரகுமான் இசை, விக்ரமின் நடிப்பு என பல பாசிட்டிவான விஷயங்கள் இருந்தும் படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
இதனால் விக்ரம், அஜய் ஞானமுத்துவுடன் இணைய இருந்த அடுத்த படத்தை தற்காலிகமாக கைவிட்டு விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் தற்போது பொன்னியின் செல்வன் படத்திலும், பா.ரஞ்சித் இயக்க விருக்கும் புதிய படத்திலும் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. அஜய் ஞானமுத்துவும் சிறிய பட்ஜெட்டில் ஒரு படம் இயக்கி இழந்த இமேஜை காப்பாற்றிக் கொள்ள திட்டமிட்டிருக்கிறார். என்கிறார்கள்.