ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
8 தோட்டாக்கள் படத்தின் மூலம் திரும்பி பார்க்க வைத்தவர் ஸ்ரீகணேஷ். அதற்பிறகு அதர்வா நடித்த ‛குருதி ஆட்டம்' படத்தை இயக்கினார். மீண்டும் அதர்வா நடிப்பில் ஒரு படம் இயக்க இருக்கிறார். இந்த நிலையில் ஸ்ரீகணேஷ் தனது நீண்ட நாள் தோழியும், காதலியுமான சுஹாசினியை நேற்று காலை திருமணம் செய்து கொண்டார். சென்னை புறநகரில் உள்ள கோவிலில் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது. பின்னர் மாலை திரையுலக நண்பர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. மணமகள் சுஹாசினி ஒரு நாடகக் கலைஞரும், நடிகையும் ஆவார். சீதக்காதி மற்றும் நெஞ்சுக்கு நீதி போன்ற படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.