'ராமாயணா' படத்தில் ரஹ்மானுடன் இணைந்த ஹாலிவுட் 'ஆஸ்கர்' நாயகன் | 'மண்டாடி' யார்? : இயக்குனர் விளக்கம் | பாடல்கள் ஹிட்டாவதற்கு 'ரீல்ஸ்' வீடியோக்கள்தான் முக்கியமா? | ரஷ்மி முரளி: தோழி நடிகையைத் தேடிய ரசிகர்கள் | விஜய் படம் ரீ-ரிலீசா… அப்போது அஜித் படமும் ரீ-ரிலீஸ்… | விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா தம்பதிக்கு பெண் குழந்தை | WWE-ல் ராணா டகுபட்டிக்குக் கிடைத்த பெருமை | வீர தீர சூரன் ஓடிடி வாங்கிய விலை இவ்ளோதானா? | ஓடிடி-யில் பெரும் விலைக்கு மோகன்லாலின் எல் 2 :எம்புரான் | புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' |
தமிழ் சினிமாவில் அடுத்த பிரம்மாண்டப் படைப்பாக உருவாகி உள்ள படம் 'பொன்னியின் செல்வன்'. இந்த மாதம் செப்டம்பர் 30ம் தேதி இப்படம் தமிழ் தவிர, ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாக உள்ளது.
அக்டோபர் மாத முதல் வாரத்தில் விஜய தசமி, ஆயுத பூஜை ஆகிய பண்டிகை நாட்கள் வருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு அந்த ஒரு வாரத்தில் விடுமுறை உண்டு. எனவேதான் விடுமுறையைக் கருத்தில் கொண்டு படத்தை செப்டம்பர் 30ம் தேதி வெளியிடுவதாக எப்போதோ அறிவித்தார்கள்.
இந்நிலையில் 'பொன்னியின் செல்வன்' படத்திற்குப் போட்டியாக செல்வராகவன் இயக்கியுள்ள 'நானே வருவேன்' படம் வெளியாகும் எனத் தெரிகிறது. மேலும், ஹிந்தியிலும் 'பொன்னியின் செல்வன்' படத்திற்குப் போட்டியாக 'விக்ரம் வேதா' படம் வெளிவர உள்ளது.
தெலுங்கில் ராஜமவுலி இயக்கத்தில் 'பாகுபலி, ஆர்ஆர்ஆர்' போன்ற பிரம்மாண்டப் படங்களும், கன்னடத்தில் 'கேஜிஎப் 2' படமும் வெளிவந்த போது அந்தப் படங்கள் இந்திய அளவில், உலக அளவில் வெற்றி பெற்றால் தங்கள் மொழி சினிமாவுக்குப் பெருமை என தெலுங்கு, கன்னடத் திரையுலகினர் வேறு படங்களை வெளியிடுவதை தள்ளி வைத்தனர்.
ஆனால், தமிழ் நாவல் உலகில் பெரிய சாதனையைப் படைத்த 'பொன்னியின் செல்வன்' நாவல், மணிரத்னம் இயக்கத்தில் பல நடிகர்கள், நடிகைகள் நடிக்க வெளிவந்து பெரும் வெற்றியும், வரவேற்பும் பெற்றால் அது தமிழ் சினிமாவுக்குப் பெருமையான ஒன்றாகவே இருக்கும். எனவே, 'நானே வருவேன்' படத்தைத் தள்ளி வைப்பதுதான் சரியாக இருக்கும் என தமிழ்த் திரையுலகில் உள்ள பலர் கருதுகிறார்கள்.