ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

அடங்கமறு படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் ராசி கண்ணா. தற்போது தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் ஆகியவற்றிலும் மாறிமாறி நடித்து வருகிறார். சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் ராசி கண்ணாவும் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக ஒரு முக்கிய கதாபாத்திரமாக நடித்திருந்தார்.
ராஷி கண்ணா, நேற்று தனது டுவிட்டர் கணக்கை செயலிழக்கச் செய்துள்ளார். மேலும் அவர் இன்ஸ்டாகிராமில் மட்டும் இருப்பேன் என்றும் கூறினார். ராஷி கண்ணா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், "வணக்கம் நண்பர்களே, எனது டுவிட்டர் கணக்கை செயலிழக்கச் செய்துவிட்டேன். ஆனால் நான் உங்களுடன் இன்ஸ்டாகிராமில் இருக்கிறேன். நன்றி!" என்று தெரிவித்துள்ளார் .
நடிகை ராஷி கண்ணா தென்னிந்திய திரைப்பட ரசிகர்களிடமிருந்து அவர் கூறிய கருத்துகளுக்காக ஆன்லைனில் நிறைய விமர்சனங்களை எதிர்கொண்டார். தனது டுவிட்டர் கணக்கை செயலிழக்கச் செய்ய இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது .
இதற்கிடையில், அவர் அடுத்ததாக தமிழில் கார்த்தி நடிக்கும் 'சர்தார்' படத்தில் நடிக்கிறார். சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் திஷா பதானி ஆகியோர் நடித்துள்ள 'யோதா' என்ற ஹிந்தி படத்திலும் அவர் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.