'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் |
கடந்த ஜூன் மாதம் இந்தியாவில் வெளியான ஹாலிவுட் படம் தோர் : லவ் அண்ட் தண்டர். மார்வெல் ஸ்டூடியோ தயாரித்திருந்த இந்த படத்தை தைக்கா வாட்டிட்டி இயக்கி இருந்தார். கிரிஸ் ஹெம்ஸ்வொர்த் தோராக நடித்திருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் உலக அளவில் நல்ல வசூலை தந்தது.
இந்தியாவில் ஆங்கிலம் தவிர்த்து இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியானது. இந்த படம் இந்தியாவில் 100 கோடி வசூலித்துள்ளதாக மார்வெல் ஸ்டூடியோ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் ஏற்கெனவே வெளியான மார்வெல் ஸ்டூடியோவின் படங்களான அவென்ஜ்ர் இன்பினிட்டி வார், அவென்ஜர் எண்ட் கேம், ஸ்பைடர் மேன் நோ வே ஹோம், டாக்டர் ஸ்டேரன்ஜர் படங்களுக்கு பிறகு இந்த படமும் 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. பிரமாண்ட பாலிவுட் படங்கள் கூட வசூலில் பலமிழந்து நஷ்டத்தை சந்தித்து வரும் நிலையில் ஹாலிவுட் படம் 100 கோடி வசூலித்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.